கார்லிக் மட்டன்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனை கழுவி சிறு சிறுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை சிறிதாக அரிந்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக அரிந்துக் கொள்ளவும்.
இஞ்சியை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். பூண்டையும் சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சியை போட்டு வதக்கவும். இஞ்சி சிவந்தவுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் மட்டனை பிழிந்து அதில் போட்டு, மஞ்சள் பொடி போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.
பிறகு மிளகாய் பொடி மற்றும் மிளகு பொடி சேர்த்து இரண்டு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
மட்டன் வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தேவைப்பட்டால் கொத்தமல்லி தூவலாம்.