கல்டாக் கறி குழம்பு
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 1 கிலோ
வெங்காயம் - 400 கிராம்
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
தயிர் - 250 கிராம்
எலுமிச்சை - 2
எண்ணைய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு
செட் 1:
காய்ந்த மிளகாய் - 20 கிராம்
தனியா - 35 கிராம்
செட் 2:
பட்டை - 2 துண்டுகள்
லவங்கம் - 5
ஏலக்காய் - 5
இஞ்சி - 12 கிராம்
செட் 3:
தேங்காய் - 35 கிராம்
கசகசா - 12 கிராம்
செய்முறை:
செட் 1ஐ, நன்றாக அரைக்கவும்.
செட் 2ஐ, வறுத்து அரைக்கவும்.
செட் 3ல், தேங்காயை வறுத்து அத்துடன் கசகசாவை சேர்த்து அரைக்கவும்.
சுத்தம் செய்த கரியை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு முக்கால் லிட்டர் தண்ணீர் விட்டு வெங்காயம், மஞ்சள் பொடி, செட் 1 கலவை, தயிர் செர்த்து அடுப்பின் மீது வைத்து நன்கு வேகவிடவும்.
கறி வெந்தவுடன், செட் 2ல் அரைத்த விழுதும், எண்ணெயையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளறி மூடவும்.
5 நிமிடத்துக்கு பிறகு செட் 3 கலவையையும், எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து குழம்பு கெட்டி ஆனவுடன் இரக்கி பரிமாறவும்.