கருவாட்டு குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெய்மீன் கருவாடு - ஒரு துண்டு

கொத்தவரங்காய் - 100 கிராம்

குடைமிளகாய் - 1

கத்திரிக்காய் - 2

பச்சைமிளகாய் - 2

முழுபூண்டு - 2

சின்ன வெங்காயம் - 20

கறிவேப்பிலை - சிறிது

தக்காளி - 1

புளி - எலுமிச்சை அளவு

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்தவரங்காயை நறுக்கி வேக வைத்து தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். குடைமிளகாய், கத்திரிக்காய், வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் எடுத்து வைக்கவும். மிளகாயை கீறி வைக்கவும்.

புளியை கரைத்து அதில் மல்லிதூள், தக்காளி, சீரகத்தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவாட்டை பொரித்து தனியாக வைக்கவும். கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் பூண்டு, குடைமிளகாய், கொத்தவரங்காய், கத்திரிக்காய் போட்டு நன்றாக வதக்கவும்.

வதக்கியதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி புளிக்கரைசலை அதனுடன் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் பொரித்த கருவாட்டை சேர்த்து வேக விடவும்

காய் வெந்து எண்ணெய் மேலே பிரிந்து வரும் பொழுது இறக்கி விடவும். மல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.