கத்தரிக்காய் கருவாட்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருவாடு - 1/4 கிலோ

கத்தரிக்காய் - 1/4 கிலோ

காராமணி (அல்லது) ராஜ்மா - 1 கப்

வெங்காயம் - 200 கிராம்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 2 தேக்கரண்டி

புளி - ஒரு எலுமிச்சை அளவு

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். கத்தரிகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்

எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்கயாம் சேர்த்து வதக்கவும்.

பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

கத்தரிக்காய் மற்றும் காராமணியை சேர்த்து வதக்கி கருவாட்டையும் சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எல்லா பொடிகளையும் சேர்க்கவும்.

உப்பு, கீறின பச்சை மிளகாய் மற்றும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

இறக்குவதற்கு முன் மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால் அதைப் பார்த்துக் கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.