எலும்பு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எலும்பு - 1/2 கிலோ

நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 15

நடுவில் கீறிய பச்சை மிளகாய் - 4

நசுக்கிய இஞ்சி - 1 அங்குலம் அளவு

நசுக்கிய பூண்டு - 5 என்னம்

தக்காளி (சிறியது) - 2

சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 1/4 மூடி

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கசகசா - 3/4 தேக்கரண்டி

தாளிக்க:

பட்டை- 1 அங்குலம் அளவு

கிராம்பு - 4

எண்ணைய் - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

குக்கரில் எண்ணையை ஊற்றி தாளித்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாயை 1 நிமிடம் நன்றாக வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பின் எலும்பை சேர்த்து நன்கு வேகவைத்து (15 நிமிடம்) அதனுடன் சாம்பார் பொடி, அரைத்த விழுது, உப்பு போட்டு கலக்கி குக்கரை மூடி சிம்மில் வைத்து வெயிட் போட்டு 25 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: