எறா தீயல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

எறா - 1/2 கிலோ

புளி - 1 எழுமிச்சம் பழ அளவு

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 3

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 3 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எறாவை சுத்தம் செய்து கழுவி தனியே வைக்கவும்.

வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

புளியை 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், சீரகம், கறிவேப்பிலை தாளித்து,

நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

கழுவிய எறாவுடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் புளி தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். தீயல் சுண்டி வரும் போது, மிளகு தூள் தூவி இறக்கவும்.

குறிப்புகள்: