எறா குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய சைஸ் எறா - 1/2 கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 3

கறிவேப்பிலை - சிறிது

மல்லி இலை - சிறிது

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

பூண்டு - 6 பற்கள்

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எறாவை சுத்தம் செய்துகொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி விட்டு மூடி விடவும். அவ்வப்பொழுது திறந்து கிளறி விடவும்.

நறுக்கிய மல்லி இலை, உப்பு சேர்க்கவும்.

மசாலா வகைகள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.

வதங்கி எண்ணெய் பிரிந்ததும் எறாவை சேர்த்துக் கிளறி மூடி விடவும்.

மேலும் ஐந்து நிமிடங்கள் சென்ற பின்னர் 1/4 கப் நீர் விட்டு கொதித்ததும் சிமில் வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.