உப்புக்கண்ட குழம்பு
0
தேவையான பொருட்கள்:
உப்புக்கண்டம் (காய்ந்த ஆட்டுக்கறி) - 10
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
புளி - 1 நெல்லிக்காயளவு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உப்புக்கண்டத்தை தட்டி 1/2 டம்ளர் வெந்நீரில் ஊறவைக்கவும். வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின், உப்புக்கண்டம் சேர்த்து வதக்கவும்.
புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி, எல்லாத்தூள்களையும், உப்பையும் போட்டு குக்கரை மூடி 15 நிமிடம் கழித்து இறக்கவும்.