ஈஸி மட்டன் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2 மீடியம் சைஸ்

கறிவேப்பிலை - 3 கொத்து

சாம்பார் பொடி அல்லது மிளகாய் + மல்லி தூள் - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 3

பட்டை, லவங்கம், சோம்பு - தாளிக்க

தேங்காய் - 4 துண்டு

முந்திரி - 8

மிளகு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்கவும். கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இதில் தூள் வகை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

மட்டனை சேர்த்து நன்றாக சில நிமிடங்கள் பிரட்டி தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.

மட்டன் நன்றாக வெந்ததும் குக்கரை திறந்து வைத்து கொதிக்க விடவும்.

தூள் வாசம் எல்லாம் அடங்கியதும் தேங்காய் + முந்திரியை நைசாக அரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்து குழம்பு பதம் வந்ததும் பொடித்த மிளகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து எண்ணெய் பிரிந்தது எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: