ஈசி கறி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறியில் ஊற வைக்க:

மட்டன் எலும்புடன் - 1/2 கிலோ

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி

பெரிய தக்காளி - 3

பெரிய வெங்காயம் - 2

தயிர் - 4 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியாத் தூள் - 3/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 5 தேக்கராண்டி

டால்டா - 1/2 தேக்கரண்டி

பட்டை - ஒரு அங்குலம் மூன்று

ஏலம் - 2

கிராம்பு - 4

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4 (இரண்டாக ஒடித்து போடவும்.)

கொத்தமல்லி தழை - 1/4 கட்டு

புதினா - 1/4 கட்டு

எலுமிச்சை - 1

தேங்காய் - ஐந்து பத்தை (அ) கெட்டி பால் ஒரு டம்ளர்

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

முதலில் ஒரு சட்டியில் தக்காளியை போட்டு நல்ல பிசையனும், பிறகு மட்டன், வெங்காயம், தயிர் போட்டு பிசையவும்.

பிறகு மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி தழை, புதினா போட்டு, உருளையை மண்ணில்லாமல் கழுவி நறுக்கி போட்டு எல்லாவற்றையும் நல்ல கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு தாளிக்க வேண்டியவைகளை பெரிய குக்கரில் தாளித்து ஊற வைத்ததை போட்டு நல்ல ஐந்து நிமிடம் கிளறி, ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

பிறகு குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்து மூடி போட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.

கடைசியில் தேங்காய் பால் ஊற்றி, சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: