ஈசி கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
கருவாடு - 1 கப் (தலையை நீக்கி கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும்)
பட்டை - 2
லவங்கம் - 3
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 20 அல்லது 1 பெரிய வெங்காயம்.
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
புளி தண்ணீர் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையாவை:
தேங்காய் துருவல் - 1/2 கப்
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10
செய்முறை:
கடாயில் நல்லெண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, சின்ன வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், கருவாடு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில் புளி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பிறகு அரைத்த விழுது (தேங்காய்துருவல், இஞ்சி,பூண்டு) சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.