இறால் ஸ்பெஷல் கிரேவி
தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 5
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 2 பல்
தக்காளி - 3
மிளகாய் தூள் - 2
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை சுத்தம் செய்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழை பொடிபொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி,பூண்டை விழுதாக அரைக்கவும்.
ஒரு கடாயில் நிறைய எண்ணெய் விட்டு சூடேறியதும், மிதமான சூட்டில் வெங்காயத்தினைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் பூண்டு, இஞ்சி விழுதினைச் சேர்க்கவும். அதில் உள்ள நீர் ஆவியாகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியும் உப்பும் சேர்த்து, சற்று தீயை அதிகமாக்கி வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து, பின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு, மிளகு தூள், கரம் மாசாலா போட்டு வதக்கிபிறகு அதில் இறால்களைச் சேர்த்து, நன்கு கலக்கவும் மிதமான தீயில் வேக விடவும்.
வெந்ததும் இறக்கி, கொத்தமல்லி தழைத் தூவி பரிமாறவும்.