இறால் முருங்கைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் - 15
தக்காளி (பெரிய பழுத்த பழம்) - 1
பெரிய முருங்கைக்காய் - 1
மாங்காய் - 1
தேங்காய் துருவல் - 1/2 மூடி
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தேங்காய் எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிறிய இறால் கூடுதல் சுவை தரும் எனினும் இங்கு தந்தது பெரிய சைஸ் இறால், முருங்கைக்காய் நீளகாயாக இருந்தால் ஒரு 8 துண்டுகளாக்கி வைக்கவும்.
தக்காளியையும், முருங்கைக்காயையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீரும் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
முருங்கைக்காய் வெந்ததும் இறாலையும், நறுக்கின மாங்காயையும் சேர்த்து 3 நிமிடம் மூடி விடவும்.
தேங்காய் துருவலையும், சின்ன வெங்காயத்தையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த தேங்காய் விழுதை வெந்த இறால் குழம்போடு சேர்த்து கிளறவும்.
அதிகம் கொதிக்காமல் நுரைத்து வரும்பொழுதே தீயை அணைத்து விடவும். தளதளவென கொதித்தால் சுவை குறையும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். மிகவும் சுவையான இறால் முருங்கைக்காய் குழம்பு தயார்.