இறால் சுரைக்காய் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் - 1/4 கிலோ

சிறிய சுரைக்காய் - 1

வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 2

புளி - நெல்லிக்காய் அளவு

சோம்பு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி (அல்லது) 2 தேக்கரண்டி மல்லிப்பொடி

சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதனுடன் இறால், நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கி, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சோம்பு, சீரகத்தூள் அல்லது சாம்பார் பொடி போட்டு புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தேவையென்றால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். நன்கு கொதித்து வற்றியவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: