இறால் சுரைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
சுரைக்காய் - 1/2 கிலோ
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெல்லம் - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 250 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 250 கிராம்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லி இலை - 1/4 கப்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெய் சூடானதும் சீரகம் பொரியவிட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
அதனுடன் நறுக்கிய சுரைக்காய் மற்றும் இறால் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்,.
குழம்பு கொதித்ததும் மிளகு தூள், உப்பு மற்றும் புளி தண்ணீர் சேர்க்கவும்.
10 நிமிடம் கழித்து கரைத்த வெல்லம் சேர்த்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.