இறால் குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
இறால் - 1/4 கிலோ
வெங்காயம் (பெரியது) -பாதி
தக்காளி - 3
மசாலாதூள் - 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
புளி - தேவையான அளவு
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை சுத்தம் செய்து அதில் 1 1/2 தேக்கரண்டி மசாலாதூள், உப்பு, மஞ்சள்தூள் சிறிது போட்டு பிரட்டி அடுப்பில் குறைந்த தீயில்வைத்து வரட்டிக்கொள்ளவும்.
பின் வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்( சிறிது வெங்காயத்தை தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்)
தக்காளியை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.
புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து நன்கு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
வரட்டிய இறாலில் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை,வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
பின் இறால் கலவையை போட்டு வதக்கி கரைத்துவைத்த புளி கரைசலை ஊற்றி கொதித்ததும் தீயை குறைத்துவைத்து வேகவிடவும்.
கொஞ்ச நேரம் கழித்து தேங்காய்பாலை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
இறால் நன்கு வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.