இறால் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உரித்த இறால் - 1 கப்

மிளகாய் தூள் - 2 1/2 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1

புளி - எலுமிச்சை அளவு

தக்காளி - 1

கத்திரிக்காய் - 2

தேங்காய் துருவல் - 1/2 கப்

வடகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 14 பல்

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் பூண்டு பல், வெங்காயம் இரண்டையும் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு தக்காளி, தேங்காய் துருவல் இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

புளியுடன் தண்ணீர் ஒரு கப் ஊற்றி கரைத்து புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைச்சலுடன் அரைத்த தேங்காய், தக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம், கறிவேப்பிலை தாளித்து அதில் தட்டி வைத்த வெங்காயம், பூண்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சலை ஊற்றி அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

5 நிமிடம் கழித்து திறந்து இறால் மற்றும் கத்திரிக்காய் போட்டு 8 நிமிடம் கொதிக்க விடவும். இறக்கும் பொழுது மேலே அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: