இறால் கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 4 (அல்லது) 5
இறால் -100 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறு துண்டு
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி அல்லது காரத்திற்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், இஞ்சி, கத்திரிக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
தாளித்தவற்றுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் கத்திரிக்காய், இறால் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது, புளி கரைசலை ஊற்றவும்.
நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.