மேத்தி புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி அல்லது பச்சரிசி - 1 1/2 கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3

வெந்தயக்கீரை - 2 கப்

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 6 பல்

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

------------------

தாளிக்க:

-----------------

எண்ணெய் - 3 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

லவங்கம் - 2

ஏலக்காய் - 2

சீரகம் - கால் தேக்கரண்டி

செய்முறை:

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து அலசி நறுக்கி வைக்கவும். அரிசியை சுத்தம் செய்து கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து பச்சை மிளகாய்

வெங்காயம் சேர்த்து முக்கால் பதம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றுடன் சாம்பார் பொடி அல்லது மிளகாய் + தனியா தூள் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.

அதில் தக்காளி, கொத்தமல்லித் தழை, வெந்தயக்கீரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.

தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துவிட்டு சேர்க்கவும். மீண்டும் கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி வேக விடவும்.

வெந்ததும் எடுத்து பக்குவமாக கிளறி ரைதாவுடன் பரிமாறவும். சுவையான மேத்தி புலாவ் தயார்.

குறிப்புகள்: