மிளகு சாதம் (1)
0
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
மிளகு பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்
சாதம் - 1 கப்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன், சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வதக்கும் போது உப்பு போட்டால் சீக்கிரம் வதங்கும்.
வெங்காயத்தை சரியாக வதக்காவிட்டால் சுவையாக இருக்காது.
மிளகு பொடியைப் போட்டு கிளறவும். சாதத்தைப் போட்டு கிளறவும்.