மிக்ஸ்ட் கீரை சாதம்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் - 2 கப்
அரைக்கீரை - 1 கட்டு
முருங்க்கைகீரை - 1 கட்டு
சிறு கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்
எண்ணைய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
-------------------------
அரைக்க:
----------------------------
சின்ன வெங்காயம் - 10 என்னம்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரிசி,பருப்பு இவைகளை கழுவி இதனுடன் மஞ்சள்தூள்,உப்பு,கீரையை சேர்த்து ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் ஊற்றி வேக விடவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை நைசாக அரைக்கவும்.
புளியை தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
புளித்தண்ணீரில் சாம்பார்தூள்,அரைத்தவிழுது ஆகியவற்றை கரைத்து அதனை அரிசி கலவையுடன் சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி அதில் கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதை சாதத்தில் கொட்டவும்.
மேலே நெய்யை ஊற்றி கிளறி சூடாக பரிமாற சுவையாக இருக்கும்.