மாங்காய் சாதம் (6)
0
தேவையான பொருட்கள்:
புளிப்பு மாங்காய் - ஒன்று
உதிரியாக வடித்த அரிசி - ஒரு சிண்டு
பட்டை - ஒரு துண்டு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உளுத்தம் பருப்பு - (வெள்ளை)அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்து கொள்ளவும்.
மாங்காயை பொடிப் பொடியாக துருவி வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பை பற்றவைத்து வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
அதன் பின் இஞ்சி, பூண்டு, பட்டை விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு துருவிய மாங்காயை தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
அதன் பின் தேவையான உப்பு சேர்த்து கிளறவும். இந்த கலவையை வடித்த சாதத்துடன் கிளறி பரிமாறவும்.