மாங்காய் சாதம் (4)





தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - ஒரு கப்
துருவிய மாங்காய் - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 2
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
வேர்க்கடலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் போடவும்.
பின் துருவிய மாங்காய், மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும். மாங்காய் நன்கு வதங்கியதும் உப்பு, பெருங்காயத்தூள், வேகவைத்த சாதம், வேர்க்கடலை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.