மாங்காய் சாதம் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/4 கிலோ

புளிப்பு மாங்காய் - 1

பச்சை மிளகாய் - 3

காய்ந்த மிளகாய் - 2,

சிறிய வெங்காயம் - 5

சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன்

கடலை பருப்பு - 3 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கொத்துமல்லி - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.

மாங்காயை தோல் சீவி துருவவும்.

வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாயை வட்டமாகவும் நறுக்கவும்.

காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்ததும், நறுக்கிய வெஙகாயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள், மாங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின் ஆறிய சாதத்தில் கொட்டி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: