ப்ரோக்கோலி ரைஸ்
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி - ஒன்று
வடித்த சாதம் - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
புதினா - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
ப்ரிஞ்சி இலை - 2
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.
ப்ரோக்கோலிப் பூக்களை மட்டும் எடுத்து சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
10 நிமிடங்களுக்குப் பிறகு ப்ரோக்கோலி பூக்களில் உள்ள நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றியெடுத்து உதிர்த்துக் (Mince) கொள்ளவும். (விழுதாக அரைக்கக் கூடாது).
பிறகு மிக்ஸியில் தக்காளியுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, கரம் மசாலா தூள், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த தக்காளி, பச்சை மிளகாய் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள ப்ரோக்கோலியை சேர்த்துக் கிளறிவிட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து இடையிடையே கிளறிவிடவும்.
அதனுடன் வடித்த சாதத்தைச் சேர்த்து நன்றாக ஒன்று சேரக் கலந்துவிட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
சென்னா கிரேவி சிக்கன் கிரேவி, ரைத்தா ஆகியவை இதற்கு நல்ல காம்பினேஷன்.