ப்ரவுன் ரைஸ் டோஃபு புலாவ்
தேவையான பொருட்கள்:
ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்
டோஃபு - 100 கிராம்
துருவிய கோஸ் - ஒரு கப்
குடை மிளகாய் - பாதி
பெங்களூர் தக்காளி - 2
வெள்ளை வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
ஆலிவ் ஆயில் - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
டோஃபுவை சிறிய துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும்.
பெங்களூர் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ப்ரவுன் ரைஸைக் களைந்து குக்கரில் போட்டு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 12 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கிவிடவும். ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஆற வைக்கவும்.
குடை மிளகாய், வெள்ளை வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் குடை மிளகாய் மற்றும் கோஸ் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும்
டோஃபு மற்றும் தக்காளிச் சேர்த்து வதக்கவும். (தக்காளியைக் குழைய வதக்க வேண்டாம். லேசாக வதங்கினால் போதும்).
அதனுடன் ஆறவைத்த சாதம் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.