பைனாப்பிள் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 200 கிராம்

பைனாப்பிள் கூழ் - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி

பொடியாக நறுக்கிய காரட் - ஒரு கைப்பிடி

---------------------------

தாளிக்க:

------------------------------

கடுகு - சிறிதளவு

உளுத்தம் பருப்பு சிறிதளவு

கடலை பருப்பு சிறிதளவு

பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீ ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்

கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 4 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீதியுள்ள பொருட்களையும் சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும். பிறகு, பச்சை பட்டாணி, மற்றும் காரட்டைப் போட்டு சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும். ( பெரியவர்களுக்குக் காரம் தேவை பட்டால், சிறிது காஷ்மீர் மிளகாய் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும்)

கடைசியில் பைனாப்பிள் கூழையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

உதிர் உதிராக வடிக்கப் பட்டுள்ள பாசுமதி சாதத்தில் இக்கலவையை சிறிது சிறிதாக போட்டு கலந்து மேலே கோத்த மல்ளியைத் தூவவும். சூடாக பரிமாறவும். பச்சை, ஆரஞ்சு என்று கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். (குழந்தைகளுக்கு சமைக்கும் போது பச்சை மிளகாயை கீறி போடவும். அகற்றுவதற்கு எளிது)

குறிப்புகள்: