புதினா புலாவ் (3)
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
புதினா - 2 கட்டு
கொத்தமல்லி தழை - 1/2 கட்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 3 மேசைகரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
இஞ்சி - சிறிது
பூண்டு - 6 பல்.
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
செய்முறை:
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காயை சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அத்துடன் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்கும் போது அரிசி, உப்பு, எழுமிச்சை சாறு சேர்த்து கலக்கி, மூடி 1 விசில் விட்டு, சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும். மணக்கும் புதினா புலாவ் ரெடி.
குறிப்புகள்:
வெங்காய பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.