பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
சின்ன வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
------------------------------
தாளிக்க:
----------------------------------
எண்ணெய், சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு - தாளிக்க
---------------------
அரைக்க:
----------------------
பச்சை மிளகாய் - 3
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
கிராம்பு - 2
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 7 பல்
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பை சேர்த்து களைந்து நீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்க வேண்டியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளிக்கவும்.
தாளித்ததும் சின்ன வெங்காயம் (முழு வெங்காயமாக போடலாம்)
தக்காளி மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகுமளவிற்கு வதக்கவும்.
பின்பு ஊற வைத்த அரிசி, பருப்பை சேர்த்து 1:2 விகிதத்தில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
விரும்பினால் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.