தேங்காய் பால் பாசிபருப்பு சாதம்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 3 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
தேங்காய் பால் - 3 கப்
பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 தேக்கரண்டி
ஆப்பிள் தக்காளி - 1 (சிறியது, நீளவாக்கில் நறுக்கியது)
மல்லி இலை - கால் கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
புதினா - கால் கட்டு (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6 (நீளவாக்கில் நறுக்கியது)
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க
பட்டை - 2 துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 5
பிரிஞ்சி இலை - 1
செய்முறை:
அரிசியுடன், பாசிப்பருப்பை சேர்த்து கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் தேங்காயை பாலை ஊற்றி கொதிக்கவிட்டு, கொதித்ததும் ஊறிய அரிசி, பருப்பை போட்டு, உப்பும் சேர்க்கவும்.
தேவையான அளவு நீர் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் மல்லி இலை, புதினாவை போட்டு மூடி போட்டு விசில் போடவும்.
தீயை குறைவாக வைத்து 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
இதற்கு புளி சேர்த்து அரைத்த மல்லி துவையல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.