தேங்காய் பால் சாதம் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - மூன்று ஆழாக்கு
நெய் - 5 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் - எல்லாவற்றிலும் மூன்று
புதினா இலை - கால் கட்டு
கொத்தமல்லி தழை - கால் கட்டு
எலுமிச்சம்பழம் - ஒன்று
தேங்காய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - இரண்டு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - நான்கு (அ) ஐந்து
செய்முறை:
அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து வைக்கவும். தேங்காயை துருவி பால் எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைத்து வைத்து கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து வைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் மூன்று தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்து தாளித்து அதில் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் கரம் மசாலா சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பால் சேர்த்து கிளறவும். பின் சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பின் அரிசி சேர்த்து கிளறி அதில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி விடவும்
பின்னர் குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் சிம்மில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கி கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதற்கு சைட் டிஷ்ஷாக சிக்கன் 65, சிக்கன் கிரேவி சேர்த்து பரிமாறவும்