தேங்காய் சோறு (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை படி
தேங்காய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
சோம்பு - 2 ஸ்பூன்
வெந்தயம் - 2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
கசகசா - ஒரு ஸ்பூன்
மல்லிக்கீரை - ஒரு கட்டு
நெய் - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
உப்பு - 2 ஸ்பூன்
செய்முறை:
வெந்தயத்தை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி 3/4 லிட்டர் அளவு பால் எடுத்துக் கொள்ளவும். முந்திரி, கசகசாவை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை களைந்து, தேங்காய்ப்பாலை ஊற்றி, ஊறிய வெந்தயம், ஏலக்காய், பட்டை, கிராம்பு, நசுக்கிய வெங்காயம், பொடி பண்ணிய சோம்பு, நெய், உப்பு, அரைத்த முந்திரி கசகசா அனைத்தையும் போட்டு மூடி அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் வற்றும்வரை அடிப்பிடிக்காமல் இடையிடையே கிண்டிவிட்டு, மல்லிக்கீரையை நைசாக நறுக்கி போட்டு தம்மில் போடவும்.
குறிப்புகள்:
இதற்கு கறி சால்னா நன்றாக இருக்கும்.