தேங்காய் சாதம் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 (கீரியது)

வெங்காயம் - 4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி, கருவேப்பிலை - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - 1/2 முடி. துருவியது.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

இதில் பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தேங்காய், உப்பு சேர்த்து வதக்கவும்.

பின் சாதத்தை கொட்டி கிளரவும். 3 நிமிடம் சிறுந்தீயில் சாதத்தோடு பிரட்டி எடுக்கவும்.

குறிப்புகள்:

சாதம் குழைந்து போகாமல் கிளர வேண்டும். இதை சாப்பிட 1/2 மணி நேரம் முன்னதாக செய்து வைத்தால் தேங்காய், சாதத்துடன் ஊற உதவும். விரும்பினால் முந்திரி வறுத்து சேர்க்கலாம்.