தேங்காய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்)

வடித்த சாதம் - ஒரு கப் (சிறிது உப்பு போட்டு வடித்து கொள்ளவும் )

உப்பு - தேவையான அளவு

-----------------------------

தாளிக்க

------------------------

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 5

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

அதில் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு அதில் வடித்த சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: