தேங்காய்ப்பால் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீரகச் சம்பா அரிசி - ஒரு தம்ளர்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பாசிப்பருப்பு - ஒரு கை

கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - அரை கப்

புதினா - ஒரு கை

கொத்தமல்லித்தழை - ஒரு கை

கறிவேப்பிலை - சில இலைகள்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான

எண்ணெயும் நெய்யுமாகக் கலந்தது - 2 டேபிள்ஸ்பூன்

---------------------------------------

அரைக்க வேண்டியவை:

-------------------------------------

பச்சை மிளகாய் - 2

துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்

பூண்டு பற்கள் - 5

----------------------------------------

பொடிக்க வேண்டியவை:

----------------------------------------

பட்டை - 2

கிராம்பு - 2

ஏலம் - 2

செய்முறை:

அரிசி, பருப்பு வகைகளைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயும் நெய்யும் ஊற்றி சூடாக்கவும்.

வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு குழையும்வரை வதக்கவும்.

பின் அரைத்த மசாலாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு பொடியைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு அரிசி, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலகள், தேவையான உப்பு சேர்த்து தேங்காய்ப்பாலும் தண்ணீரும் சேர்ந்து 5 தம்ளர்கள் இருக்குமாறு அளந்து கொண்டு ஊற்றி நன்கு கலந்து மிதமான தீயில் சமைக்கவும்.

குறிப்புகள்: