தேங்காய்பால் சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெய் - தேவைக்கு

பட்டை - 2

கிராம்பு - 3

ஏலக்காய் - 1

புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 5 கீறி வைக்கவும்

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 8 பல்

இஞ்சி - 1/2 அங்குலம்

தேங்காய் பால் - 4 1/2 கப்

பாஸ்மதி அரிசி - 2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.

புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

பின்னர் அரைத்த விழுது சேர்க்கவும்.

சிறிது நேரம் வதக்கிய பின் தேங்காய்பால் சேர்க்கவும்.

உப்பு போட்டு, பால் கொதிக்கும் போது அரிசி போட்டு, நன்றாக கிண்டி குக்கரை மூடவும்.

2 விசில் விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய்பால் அதிகம் விரும்பாதவர்கள் சிறிது பாலை குறைத்து கொண்டு அதற்கு சமமான அளவு தண்ணீர் சேர்க்கவும்.