தக்காளி சாதம் (16)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரை கிலோ

தக்காளி - 300 கிராம்

பச்சைமிளகாய் - 5

பெரிய வெங்காயம் - 4

பட்டை - 4

லவங்கம் - 4

ஏலக்காய் - ஒன்று

பூண்டு - 6 பல்

இஞ்சி - சிறிய அளவு

புதினா - சிறிதளவு

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 100 மில்லி

செய்முறை:

முதலில் சமைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக அரிசியை ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். சிறிதாக நறுக்கிய இஞ்சி, பூண்டை வதக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை இட்டு வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவைப் போடவும்.

5 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த பின் ஊறவைத்த அரிசியை போடவும்.

நன்கு வெந்த பக்குவம் வந்த பின் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மூடி வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து இறக்கி, கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: