தக்காளி சாதம் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - 3 கப்
தக்காளி - ஐந்து
வெங்காயம் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அரைத்த தக்காளி விழுது, மல்லித் தழை, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 10 நிமிடம் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு அரிசியை களைந்து 3 கப் தண்ணீர் விட்டு சேர்க்கவும். 2 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.