க்ரீன் புலாவ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 1/2 கப்

பச்சை பட்டாணி - 100 கிராம் (ஊறவைத்தது)

சிக்கன் - 250 கிராம்

புதினா - 1 கட்டு

கொத்தமல்லி இலை - 1 கட்டு

தக்காளி - 150 கிராம்

பல்லாரி - 200 கிராம்

பச்சை மிளகாய் - 6

கருவா - 1 துண்டு

ஏலம் - 2

கிராம்பு - 3

இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

ரம்பை இலை - சிறிது

தயிர் - 2 1/2தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

முந்திரி - 10

திராட்சை - 10

தேங்காய் பால் - 1 கப் கெட்டியானது

எழுமிச்சை பழம் - பாதி

செய்முறை:

முதலில் வெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.சிறிது வெங்காயம் தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.(சிறிது தாளிப்புக்கு எடுத்துவைக்கவும்)

சிறிது நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.

கொத்தமல்லி இலை,புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.(சிறிது தாளிப்புக்கு இரண்டையும் எடுத்துவைக்கவும்)

பின் சிக்கனில் நறுக்கிய பச்சை மிளகாய் ,வெங்காயம்,தக்காளி,1 1/2 தேக்கரண்டி தயிர்,புதினா,கொத்தமல்லி இலை,பட்டாணி,கழுவின அரிசியை போட்டு பிரட்டிவைக்கவும்.

பின் குக்கரில் நெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு,பின் வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கி,இஞ்சி,பூண்டு விழுது,1 தேக்கரண்டி தயிர்,ரம்பை இலை,கொத்தமல்லி இலை,புதினா போட்டு தாளித்து, பின் சேர்த்துவைத்த கலவைகளை போட்டு நன்கு கிளறி தேங்காய் பால்,மற்றும் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடிவிடவும்.

வெந்ததும் எழுமிச்சை சாற்றை பிழிந்து ஊற்றி வறுத்த முந்திரி,திராட்சையை மேலே தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

குக்கரில் அதிகமான தீயில்வைத்து 2விசில் வந்ததும் தீயை குறைத்து 2விசில் வந்ததும் இறக்கவும் 5 நிமிடம் கழித்து குக்கரில் நீராவி வெளியேறியதும் மூடியை திறக்கவும்.

தேங்காய் பால் மற்றும் தண்ணீரின் அளவை அரிசியின் அளவுக்கு 2 மடங்காக வைத்துக்கொள்ளவும்.