கொத்தமல்லி புலவு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புலவு அரிசி - 2 டம்ளர்

தேங்காய் - 2

கொத்தமல்லி - 2 கட்டு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

கொத்தமல்லி விதை - ஒரு தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

வெங்காயம் - 5

இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 10

பட்டை - சிறிதளவு

கசகசா - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

முந்திரி - அலங்கரிக்க

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி 3 டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மீதமிருக்கும் தேங்காயில் அரை முடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

தேங்காய் துருவல், ஏலக்காய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், பட்டை, ஒன்றரை கட்டு கொத்தமல்லி தழை, கொத்தமல்லி விதை, கசகசா எல்லாவற்றையும் நன்றாக விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிப் பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு புலவு அரிசியை நன்றாக கழுவி, வதக்கிய விழுதை சேர்த்து 3 டம்ளர் தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கரில் 15 நிமிடம் வைக்கவும்.

கொத்தமல்லி புலவு ரெடியானதும் மீதமுள்ள கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியையும் சேர்த்து அலங்கரிக்கவும்.

வெங்காயத் தயிர் பச்சடியுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: