கேரட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - ஒரு கப்

கீறிய பச்சை மிளகாய் - 3

பொடிசாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

முந்திரி பருப்பு - 8

கறி வேப்பிலை - சிறிதளவு

நெய் - ஒரு கரண்டி

உதிராக வடித்தசாதம் - 3 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் நெய் ஊற்றி முந்திரியை சிவக்க வறுக்கவும்.

அதனுடன், துருவிய கேரட், பொடிசாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து சுருள வதக்கவும்.

நன்குசுருண்டு வந்ததும் சாதத்தை அத்துடன் சேர்த்து உப்பு, கொத்தமல்லி தூவி நன்கு கிளறவும்.

குறிப்புகள்:

மிகவும் சுவையான சத்தான சாதம் இது.