கீரை சாதம் (1)
0
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
வெந்தய கீரை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கீரையை வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி கரையும் வரை வதக்கி தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்கி சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
குறிப்புகள்:
கேரட் பொரியல் உடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.