கிட்ஸ் கேரட் புலாவ்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
காரட் துருவல் – 4 கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
வெங்காயம் - 2
புதினா இலைகள் - 10
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
தயிர் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 4
பச்சைமிளகாய் - 4 கீறியது(குழந்தையின் காரத்திற்கேற்ப)
பட்டை - 2
இலவங்கம் - 2
ஏலக்காய் - 2
பிரியாணிஇலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை 2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும். 4 கப் அளவிற்கு காரட்டை துருவிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காயிலிருந்து 2 கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு சீரகம், பட்டை, இலவங்கம் மற்றும் ஏலக்காயை போட்டு வறுப்பட்டதும், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
பின் பூண்டு துண்டுகள் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கி, பின் புதினாயிலை மற்றும் காரட்டை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதங்கியதும் பாசுமதி அரிசி ஊறிய தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும், அதில் அரிசியை கொட்டி கிளறவும்.
பிறகு அதில் தேங்காய்ப்பாலை ஊற்றவும். மேற்கூறியவற்றை மிதமானத் தீயிலேயே செய்யவும்..
பின் அரிசி பாதி வெந்ததும் அதில் எலுமிச்சைச்சாறை ஊற்றி, கொத்தமல்லித்தழைகளை போட்டு நன்றாக கிளறி, தீயை குறைத்து, அதை ஒரு குக்கரில் கொட்டி மூடி விசில் போடவும்.
10 நிமிடங்கள் சிறுதீயிலேயே வேகவிடவும்.
பிறகு சூடு அடங்கியதும், எடுத்து அதில் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்புகளைப்போட்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள்:
மாற்றுமுறை இதில் தேங்காய் பால் தவிர்க்க விரும்பினால், அதற்கு பதில் பால் சேர்க்கலாம். இதில் 2 கப் காரட் துருவலுக்கு பதில் 1 கப் காரட் துருவலுடன் 1 கப் பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து காரட் கேப்சிகம் புலாவ் போல செய்யலாம்.