காய்கறி சாதம் (கதம்ப சாதம்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 400 கிராம்

பருப்பு - 100 கிராம்

கத்தரிக்காய் - 100 கிராம்

முருங்கைக்காய் - ஒன்று

வாழைக்காய் - ஒன்று

மாங்காய் - ஒன்று (கிடைத்தால் சிறியது)

உருளைக்கிழங்கு - 100 கிராம்

தக்காளி - 2

சின்ன வெங்காயம் - 10

பச்சைமிளகாய் - 3

கறிவேப்பிலை - 2 கொத்து

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

பெருங்காயம் - அரை தேக்கரண்டி

தேங்காய் - 2 சில்

சீரகம் - ஒரு தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

10 நிமிடம் வெந்தவுடன் காய்கறிகளை பெரியதாக நறுக்கி போட்டு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றுடன் அரிசி, மிளகாய் தூள், உப்பு போட்டு 10 கிளாஸ் தண்ணீரில் புளியைக் கரைத்து விட்டு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும்.

தேங்காய் சில், பூண்டு, சீரகம் ஆகியவற்றை அரைத்து போட்டு குக்கரை மூடி 3 விசில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.

குறிப்புகள்: