காபூல் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - ஒன்று
காரட் - ஒன்று
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை:
அரிசியை சற்று உதிரியான சாதமாக வடித்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, ஒரு வெங்காயம் மற்றும் காரட் இவற்றை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மீதமுள்ள வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு நறுக்கின வெங்காயம், உருளைக்கிழங்கு, காரட் இவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
ஒரு தவாவில் நெய் விட்டு அதில் அரைத்து வைத்துள்ள விழுதினை இட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள காய்களையும், ஒரு கப் தண்ணீரையும் இதில் சேர்க்கவும்.
இதனை சுமார் 10 நிமிடங்களுக்கு நன்கு வேகவிடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தை பரப்பி, அதன் மீது இந்த குழம்பினை சிறிது ஊற்றவும்.
மீண்டும் இதே போல் இன்னோரு அடுக்கு சாதமும், குழம்பினையும் இடவும். பிறகு அதன் மேலே சாதத்தினை பரப்பி மூடவும்.