கல்கண்டு சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - ஒரு கப்

கல்கண்டு - ஒரு கப்

பால் - ஒரு கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 15

ஜாதிக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கப் பாலையும் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைக் களைந்து போடவும். அரிசி நன்றாக குழைய வெந்தபிறகு கல்கண்டினை பொடித்துப் போடவும்.

கல்கண்டு கரந்து நன்கு பரவிய பிறகு இறக்கி, பாதி நெய்யில் முந்திரிப்பருப்பினை சிவக்க வறுத்துப் போடவும்.

மீதி நெய்யினை சூடாக்கி சாதத்தில் ஊற்றவும். ஜாதிக்காயை பொடித்துப் போடவும்.

குறிப்புகள்: