கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 டம்ளர்
துவரம் பருப்பு - 1 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
புளி - 1 எலுமிச்சை அளவு
முருங்கைக்காய் - 2 (நீளமாக நறுக்கியது)
கத்திரிக்காய் - 100 கிராம் (துண்டாக நறுக்கியது)
கொத்தவரைக்காய் - 100 கிராம் (துண்டாக நறுக்கியது)
அவரைக்காய் - 100 கிராம் (துண்டாக நறுக்கியது)
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
சாம்பார் மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
-----------------------------
தாளிக்க
-----------------------------------
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்
------------------------------------
வறுத்து அரைக்க
--------------------------------------
தேங்காய் - 1 மூடி
வத்தல் மிளகாய் - 4
கடலைபருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 4 ஸ்பூன்
நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்
செய்முறை:
பீன்ஸ், காரட் போன்ற வீட்டில் உள்ள எந்த காய்கறிகளையும் உபயோகிக்கலாம்
அரிசி, பருப்பு இவற்றை ஒன்றாக குக்கரில் வைத்து வேக வைக்கவும்...
காய்கறிகள் கத்தரி, முருங்கை போன்றவற்றை ஒரு முறை வாணலியில் அல்லது குக்கரில் (இது எல்லவற்றையும் போட்டுக் கிளற வாட்டமானது) சிறிது எண்ணை விட்டு வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளும் சேர்த்து புளி கரைசல், மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் வெந்த சாத, பருப்பு கலவை, காய்கறிகள், எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறவும். வறுத்து அரைத்த தேங்காய் மற்றும் சாமான்கள் பொடியையும் கடைசியாக போட்டு நன்றாகக் கிளறி, தாளித்து இறக்கவும்.