எளிய புதினா புலவு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு

கொத்துமல்லி - 1/2 கட்டு

தக்காளி - 2

மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி

கிராம்பு - 4

வெங்காயம் - 2

பட்டாணி - கால் கப்

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

செய்முறை:

புதினா,கொத்தமல்லியை கழுவி அரைத்து கொள்ளவும்.

தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து தனியாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய வைத்து கிராம்பு தாளித்து, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு மிளகாய்தூள், தக்காளி விழுது ஆகியவற்றையும் சேர்த்து வதக்க்கவும்.

தக்காளி வதங்கியதும் பட்டாணி, அரைத்த மல்லி புதினா விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் .

பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி, விசில் வந்தவுடன் சிம்மில் வைத்து 10 நிமிடங்கள் சமைக்கவும்

இந்த வகை புலவு பசியை தூண்டும் வல்லமை உடையது.

குறிப்புகள்: