உருளைக்கிழங்கு ஃபிரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்

உருளைக்கிழங்கு - 3

பெரிய வெங்காயம் - 3

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 ஸ்பூன்

நெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை சன்னமாக, நீளமாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோல் சீவி, தீக்குச்சி போல் சன்னமாக நறுக்கி, கழுவி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு சேர்த்து சிவக்க வறுக்கவும்.

தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு, உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்:

தக்காளி சாஸ், கிரேவியுடன் சாப்பிடலாம்.