ஈசி இனிப்பு பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
ஏலக்காய் - 4 என்னம்
முந்திரி பருப்பு - 10 என்னம்
உலர்ந்த திராட்சை - 10 என்னம்
நெய் - 1/4 கப்
செய்முறை:
அரிசி, பருப்பை கழுவி 1 கப்புக்கு 2 1/2 கப் வீதம் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போடவும்.
விசில் வந்ததும் 12 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பின் வெல்லத்தை தட்டி எடுக்கவும்.
பின் அரிசி வெந்த பின் தட்டிய வெல்லத்தை போட்டு கிளறவும்.
இது அந்த சாதத்தின் சூட்டிலேயே இளகிவிடும்.
இது செய்யும் போதே தாளிக்கும் கரண்டியில் 1 ஸ்பூன் நெய்யை சற்று சூடு படுத்தி ஏலக்காயை நசுக்கி சேர்த்து அதனுடன் உலர்ந்த திராட்சை சேர்த்து வதக்கி பொரிந்ததும் பொங்கலில் நெய்யுடன் கொட்டவும்.
பின் மற்றுமொறு 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை போட்டு சிவக்க வறுத்து நெய்யுடன் பொங்கலில் கொட்டவும்.
பின் நன்றாக மீதியுள்ள நெய்யை விட்டு பொங்கலை கிளறி அடுப்பை சிம்மில் வைத்து கிளறி வெல்லத்தின் வாசம் போனதும் இறக்கி பரிமாறலாம்.
ரெடி.
குறிப்புகள்:
தண்ணீர் வைத்து கொதித்ததும் அரிசி போட்டு கிளறி கிளறி கைவலிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இது 5 நிமிடம் கிளறுதலே போதுமானது.